சமீப காலங்களில் இந்தியாவில் பிரபலமாகி/பிரபலமாக்கப்பட்டு வரும் ஒரு வித துணி
தான் லினன். அதிகமான ஆடை வடிவமைப்பாளர்கள் இதை பிரபலமாக்கி வருகிறார்கள் .
சட்டுன்னு தெரியணும்னா - நம்மூர் அரசியல்வாதிகள் அணிந்திருப்பார்களே அதேதான் .
லினன் – என்பது flax எனப்படும் ஆளிவிதைச்செடியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு
இயற்கை இழை ( Natural Fiber ) . பிரேசில் , நெதர்லாந்து , பிரான்ஸ் போன்ற
குளுமையான பிரதேசங்களில் விளையும் இந்த flax fiber ல் தயாரிக்கப்படும் ஆடைகள்
இருபது சதவீத வாட்டர் கன்டென்ட் கொண்டவை என்பது வேறெந்த துணி வகைகளுக்கும் இல்லாத சிறப்பம்சம்
.
நம்மைப் போன்ற வெந்து தணியும் வெப்ப பூமியில் வசிப்பவர்களுக்கு ஏற்றதொரு உடை
லினன் . மிக விரைவாக தண்ணீரை உறிஞ்சுவது , ஒரே சீரான வெப்பத்தை தக்கவைத்துக்
கொள்வது இதுவும் லினன் துணிகளின் சிறப்புகளில் சில .
போடுறவங்க போட்டாதான் லினனுக்கும் பெருமை , போடுரவங்களுக்கும் பெருமை என்று
சொல்வார்கள் . லினனின் குறை என்று
பார்த்தால் – பராமரிப்பு தான் ... டபுள் ஸ்ட்ராங் இஸ்திரி போட்டாலும் , கசங்கி போன
பழைய கந்தை மாதிரி தான் இருக்கும் .
ஸ்டைல் அன்ட் லுக்கை விட கம்போர்ட் & கண்வீனியன்ட் தான் முக்கியம்னு சொல்றவங்க
. பராமரிப்பெல்லாம் எனக்கொரு மேட்டரே இல்லன்னு சொல்ற ஆள் நீங்கன்னா கண்டிப்பா
லினன் உங்களுக்கான ஆடை . அதிகமா வெயிலில் அலைபவர்கள் , BHI அதிகமுள்ளவர்கள்
அவசியம் அணிய வேண்டிய ஆடையும் கூட . Formal & Casual இரண்டிற்கும் லிணனை
பயன்படுத்திகொள்ளலாம் .
லினன் - முக்கியமா கவனிக்க வேண்டியவை :
- விலை அதிகம் ( குறைந்த பட்சம் மீட்டர் 300 ரூபாயிலிருந்து ஆயிரம் வரை ).
- Shrinkage அதிகமிருக்கும் என்பதினால் ,துணி வாங்கி தைப்பவர்கள் ( Tailor Made ) கண்டிப்பாக தண்ணீரில் போட்ட பிறகே தைக்கக் கொடுக்க வேண்டும் .
- ஆயத்த ஆடை ( Ready made) வாங்குபவர்களுக்கு பிர்ச்சினை இல்லை . துணியாகவோ/ஆடையாகவோ ஏற்கனவே தண்ணீரில் போட்டு எடுத்திருப்பார்கள் .
- லினன் துணியின் Elasticity அதிமென்பதினால் , Slim Fit ஐ தெரிவு செய்வது உத்தமம் .
- வாங்கும் முன், நூறு சதவீத லினன் துணியா , பிளண்டட் லினன் துணியா ( காட்டன் அல்லது பாலியஸ்டர் கலந்தது) என்று பார்த்து வாங்குவது நலம் . முன்னது விலை உசத்தி , பின்னது கொஞ்சம் குறைவு .
டிஸ்கி : ஆதித்யா பிர்லா குரூப் – லினன் கிளப் என்றே தனியானதொரு டிவிசன்
ஆரம்பித்து , ( Customer made வசதியுடன் ) நாடெங்கிலும் ஷோரூமை திறந்து
கொண்டிருக்கிறார்கள் . என்னவொன்று விலைதான் அதிகம் .
நீங்கள் கோவை வாசியெனில் , டவுன் ஹாலில் இருக்கும் உதய் டெக்ஸ்டைலில் உங்கள்
பர்சுக்கு பங்கம் வைக்காமல் Linen துணிகளை வாங்கலாம் .
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .