மனிதனின் அடிப்படை தேவை வரிசையில் உணவுக்கு அடுத்தது உடை , ஆனால் எம்மை போன்றவர்களுக்கு
உடையின் மூலமே உணவு . அட ஆமாங்க ஜவுளித்துறையில் வேலை பார்க்கும் எங்களுக்கெல்லாம்
உடையின் அல்லது அது சார்ந்த உற்பத்தி மூலம் தான் உணவுக்கான ஆதாரமே கிடைக்கின்றது .
அடிப்படையில் ஜவுளித்துறை சார்ந்த குடும்பத்தில் இருந்தோ இல்லை அது சார்ந்த படிப்போ
இல்லாத பின்னணியில் இருந்து வந்தவன் . கடந்த பத்து வருடங்களாக ஜவுளித்துறையில் வேலை
பார்த்துக்கொண்டிருக்கின்றேன் . ஜவுளித்துறை தான் ஆதாரம் என்றானவுடன் , துறை சார்ந்து
ஒரு இளநிலை பட்டயப்படிப்பு முடித்து தற்போது முதுநிலை இரண்டாமாண்டு படித்துகொண்டிருக்கின்றேன்
.
Fashion Designing,
Fashion Photography போன்ற துறைகளின் மேல் எப்பவுமே ஒரு Grace
உண்டு. ரெம்ப Stylish ஆ ஒரு Boutique ஆரம்பிக்க
வேண்டும் என்பது ஆசை . அதன் தாக்கத்திலும் , ஆர்வத்திலும் இதோ இந்த தளத்தினை இன்று
ஆரம்பித்திருக்கின்றேன் . Apparels & Accessories, Fabric,
மற்றும் ஜவுளித்துறை சார்ந்த செய்திகளை இந்த தளத்தில் பதியலாம் என்று எண்ணியிருக்கின்றேன்.
நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்னுங்குற பழமொழி போல , இதோ நான் வேஷம் போட்டுவிட்டேன்
, விரைவில் குரைக்க ஆரம்பிக்க உள்ளேன் ....! நாய் போல குரைப்பேனா என்பது தெரியவில்லை
.... But முயற்சி செய்கின்றேன் ....!
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
அட...! எங்க ஏரியா - ஜவுளித்துறை...!
ReplyDeleteசிறப்பாக தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
இனி நம்ம ஏரியா ...!
Deleteபெண்களுக்கு மிகவும் பிடித்த துறை fashion designing. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றிங்கம்மா ...!
Deleteதொடருங்கள்...வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி குமார் .!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteநன்றி நண்பரே ....! சந்தை வெகு நாட்களாக திறக்கப்படவில்லை போலும் ...!
Deleteவாழ்த்துக்கள் நண்பரே..!!
ReplyDeleteநன்றி பரதன் ...!
Deleteபுது வூட்டு கிரகபிரவேசத்துக்கு வாழ்த்துகள். வர்றவங்களுக்கு ஆண்களுக்கு ஒரு சர்ட் பிட்டும், லேடீசுக்கு ஒரு ஜாக்கட் பிட்டும் உண்டா!? ஏன்னா நீங்கதான் துணி டிபார்ட்மெண்ட் ஆளாச்சே!
ReplyDeleteபுது வீட்டிற்கு பிரவேசித்ததற்கும் , கிரகபிர"வேசத்துக்கு" வாழ்த்துகள்..... சொன்னதற்கும் அக்காவுக்கு டபுள் நன்றிகள் .....!
Deleteபிட்டு அடிச்சுதான் பழக்கம் .... கொடுத்து பழக்கமில்ல ....! :)
வணக்கம்
ReplyDeleteஜவுளித்துறை சார்ந்த செய்திகளை இந்த தளத்தில் பதியலாம் என்று எண்ணியிருக்கின்றேன்.....
நல்ல முயற்ச்சி பகிருங்கள் நானும் கற்றுக்கிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் ...! BTW கற்றுக்கொள்ளும் அளவுக்கு ஒன்னும் பெரிசா இருக்காது ....! :-)
Deleteஎங்க ஊரும் வருமா?! பட்டுக்கு பேர் பெற்றதாச்சே! எங்க ஊரு!
ReplyDeleteநீங்க எழுதுனா போட்டுறலாம் ....!
Deleteதொடருங்கள், வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கும்மாச்சி ...!
Deleteபுதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteரெம்ப நன்றிங்க ...!
Deleteஆவியும் அட்டெண்டன்ஸ் போட்டாச்சு!!
ReplyDeleteலேட் அட்டெண்டன்ஸ்க்கு அபராதம் விதிக்கப்படும் :)
Deleteஎன்னங்க குரைக்குறத ஆரம்பிச்சுட்டு விட்டுட்டீங்க! லினன் பற்றிய பதிவு பயனுள்ளது. இதைப் போல ஜவுளி நுகர்வோர்க்கு தேவையான தகவல்கள் இல்லையென்றே சொல்லலாம். வாய்ப்பிருந்தால் பதிவைத் தொடரவும் . ஒரு வேளை முக-நூலில் பதிவிட்டால் கூடவே இவ்வலைப்பதிவிலும் வெளியிடுங்கள் திரும்ப வந்து வாசிக்க இதுதான் வசதி.
ReplyDelete